Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

#

கிழக்கிலங்கையின் புகழ்பற்ற கிராமங்களில் சம்மாந்துறையும் ஒன்றாகும் இப்பிராந்தியத்தில் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியமுள்ள ஊராக இவ்வூர் விளங்குகின்றது கல்முனை - அம்பாறை வீதியில் அமைந்துள்ள சம்மாந்துறை அம்பாறை மாவட்டத்தின் முக்கிய கேந்திர ஸ்தானங்களில் ஒன்றாக விளங்குகின்றது


இம்மாவட்டத்தின் மிகப்பழமை வாய்ந்த நகரங்களுள் ஒன்றான சம்மாந்துறை 1947 ஆம் ஆண்டிலே பட்டின சபை அந்தஸ்தைப் பெற்றிருந்தது புராதன காலம் முதல் இஸ்லாமிய கலாசார விழுமியங்களை அனுஷ்டிக்கும் ஊராகும் 1973களில் சம்மாந்துறையின் குடிசனத் தொகை எறத்தாள 60 ஆயிரத்தையும் தாண்டி இருந்ததுடன் 20ற்கும் மேற்ப்டட முஸ்லிம் பாடசாலைகளும் அமைந் திருந்தன இக்காலத்தில் தான் தப்லீக் ஜமாஅத்தின் செல்வாக்கும் இங்கு மேலோங்கி இருந்தது இவ்வளவும் இருந்தும் ஷரீஆ கல்வியை போதிக்கும் நிருவனம்


நிருவனம் ஒன்று சம்மாந்துறையில் இல்லாமல் இருந்தமை பலரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது ஷரீஆ கல்வியைதேடி இந்தியாவுக்கும் வெளி ஊர்களுக்கும் குறிப்பிட்ட சிலர் சென்று ஆலிம்களாகி வந்தனர் இதனால் இஸ்லாமிய கற்கை நெறிகளுக்கான ஓர் இஸ்லாமிய நிறுவனத்தின் தேவை உணரப்பட்டது. எம்.எல். மீராலெவ்வை(மெக்கி ஸ்டோர் ஹாஜியார்) மற்றும் மௌலவி எம்.ஆர் முஹம்மதலி அவர்களின் அயராத முயற்சியின் பலனாக 12 பேர் கொண்ட நிருபாக சபை உருவாக்கப்பட்டு, 1973 மார்ச் 23ஆம் திகதி சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அதன் அதிபாராக மர்ஹும் மௌலவி எம்.பி அலியார் ஹஸரத் (தேவ்பந்த) பிரதி அதிபராக மௌலவி எம்.ஆர்.முஹம்மதலி கடமையாற்றினார்கள்.


மௌலவி எம்.பி அலியார் ஹஸரத் (தேவ்பந்த) தின் அயராத முயற்சினாலும் தன்னலமற்ற சேவையினாலும் இக்கல்லூரி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது ஆறுபேருடன் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரியில் தற்போது நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் ஒவ்வெரு வருடத்திற்கும் 250ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றதுடன் 15 விரிவுரையாளர்களும் 12 பகுதி நேர விரிவுரையாளர்களும் கற்பித்து வருகின்றனர்.

மௌலவி தராதரப்பத்திரம் வழங்குவதற்கு தகுதியான ஓர் அறபுக்கல்லூரியாக 01.01.1975 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் கல்வி அமைச்சினால் இக்கல்லூரி அங்கீகரிக்கப்பட்டதுடன், சவூதி அரபிய முஹம்மட் பின் சவூத் இஸ்லாமிக் பல்கலைக்கழகத்தினால் 24.05.1994 ஆம் திகதியும் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 02.12.1996 ஆம் திகதி பதியப்பட்டது. 1980 ஆம் ஆண்டு முதல் இங்கு விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால் இங்கு கல்வி பயில்வதற்கு வெளியூர் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.


சிறந்த கல்வித்திட்டம் ஒன்றை தயாரித்து சிறப்பான ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்று மௌலவி எம்.பி அலியார் ஹஸரத் (தேவ்பந்த) சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். இக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா 1981 ஆம் ஆண்டு நடைபெற்றது இதில் ஆறுமாணவர்கள் முதன்முதலாக பட்டம்பெற்று மொளவியாக வெளியேறினார்கள் இவர்கள் தங்கள் மேற்படிப்பினை பாகிஸ்தான் மதீனா பல்கலைக்கழகம் போன்றவற்றில் மேற் கொண்டனர். 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியாகிய 25 மாணவர்கள் இலங்கை இந்தியா பாகிஸ்தான் கல்வி கற்றார்கள். 1988 மற்றும் 1989 ஆண்டு காலப்பகுதியில் வெளியாகிய 16 மாணவர்கள் மதீனாவில் ஜாமியாவில் கல்வி கற்றனர். இது வரையூம் 17 பட்டமளிப்பு விழாக்கள் நடைபெற்றுள்ளதுடன் 216 மொளவிகள் வெளியேறியுள்ளனர்.

அல்குர்ஆனை மனனமிட்ட (ஹிப்ழு) ஹாபிழ்களை உருவாக்கும் நோக்குடன் கடந்த 2014 ஆம் இங்கு அல்குர்ஆன் மனன வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் அதிபராக மொளவி எஸ்.இஸ்மாலெவ்வை கடமையாற்றி வருகின்றார். இக் கல்லூரிக்கு எட்டாம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களே நேர்முகப் பரீட்சை முலம் தெரிவுசெய்யப்படுவர். இவர்களுக்கு நாங்கு ஆண்டுகள் வரை ஷரீஆ கல்வியுடன் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையிலும் தோற்றுவார்கள் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு க.பொ.த உயர்தர வகுப்புப் பாடங்களும் நடாத்தப்படுகின்றன. உயர்தர பரீட்சையில் சித்தியடைகின்ற மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கும் கல்வியியல் கல்லூரிகளுக்கும் தெரிவு செய்யப்படுகின்றனர்


இம்மாணவர்களுக்கு மேலதிகமாக கணனி வகுப்புக்கள் அறபு மற்றும் ஆங்கில மொழிகளில் சிறந்த ஆசிரியர்கள் முலம் கற்ப்பிக்கப்படுகின்றன. மேலும் இக் கல்லூரியில் 4500ற்கும் மேற்ப்பட்ட கிதாபுகளும்கொண்ட நூல் நிலையமும் இங்கு காணப்படுகின்றமையோடு சிறந்த பாடத்திட்டங்களும் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். ஒரு வருடத்தில் அரையாண்டுப் பரீட்சை வருட இறுதிப்பரீட்சை என இரண்டு பரீட்சைகள் இங்கு நடைபெறும். வருட இறுதியில் மௌலவிப் பரீட்சை நடைபெறும். வேறு அறபு கல்லூரிகளில் கடமையாற்றும் விரிவுரையாளர்களை கொண்டு மௌலவிப்பரீட்சை நடாத்தப்படும். அரையாண்டுப் பரீட்சையும் வருட இறுதிப்பரீட்சையும் இங்குள்ள விரிவுரையாளர்களால் நடாத்தப்படும். வாரம் ஒரு முறை மாணவர் மன்றக்கூட்டம் நடைபெறும்.