Call Now(+94) 672261194

Send Messagetiacstr@gmail.com

Our LocationLake Road, Sammanthurai

A chinese lion statue

அலியார் ஹஸரத் அவர்கள் சம்மாந்துறை பிறப்பிடமாகவும் மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தப்லீகுல் இஸ்லாம் அறபிக் கல்லூரியின் முதல் அதிபரும் அவார். வட இந்தியாவில் உள்ள தேவ்பந்த் அறபிக் கல்லூரியில் சன்மார்க்க கலைகளையும் அறபு உருது போன்ற மொழிகளையும் கற்றுத்தேறி தாயகம் மீண்ட போது அவர்களின் அறிவுத் திறனை மதித்த சமகாலத்தில் சம்மாந்துறை ஏற்கனவே அமையப் பெற்றிருந்த தாருல் ஹஸனாத் கலாசாலை அல்குர்ஆன் மனனம் செய்யப்படுவதை மட்டுமே தனது பாடத்திட்டமாக கொண்டிருந்தமையால் மார்க்க கல்வியின் மற்றுமொரு பிரிவான கிதாப் பாடத்திட்டம் உள்வாங்கப்பட்ட புதிய ஒரு மதரஸா ஸ்தாபிக்கப்படவேண்டும் என்ற கருத்து சம்மாந்துறையிலுள்ள பிரமுகர்களிடம் உருவானது மௌலவி MB. அலியார் அசரத் அவர்கள் அதிபர் பதவியை பொறுப் பேற்க அழைக்கப்பட்டார். இதனால் அரசியின் ஆசிரிய நியமனத்தை ஏற்றுக் கொள்வதா? அல்லது மார்க்க கல்வியை கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ள மதரஸாவினை பணி புரிவதா? என்ற தேர்வில் ஆசிரியர் நியமனத்தை புறத்தள்ளிவிட்டு எந்த ஒரு சன்மானத்தை எதிர் பார்க்காது தப்லீகுல் இஸ்லாம் அறபிக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக் கொண்டார். 1973ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரியில் மரணிக்கும் வரை தன்னுடைய பணியை செவ்வனே ஆற்றிக்கொண்டு வந்தார்.

ஹஸ்ரத் அவர்களின் ஊர் வருகையின் பின்னர்தான் மார்க்கதுறையில் சமுக துறையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன முஅல்லபதுல் குலுப் என்ற இஸ்லாத்தில் இணைந்தோருக்கான நெறிப்படுத்தும் சபையின் ஸ்தாபகராகவும் அதன் தலைவராகவும் ஹஸ்ரத் அவர்கள் கடமை புரிந்தார் இதனால் புதிதாக இஸ்லாதை எற்றுக் கொண்டவர்கள் வேறு வழிகளுக்கு திசை திரும்பி விடாமல் மார்க்க நெறியினிலும் சமுக செயற்பாடுகளிலும் பூரணமாக இயங்க இவ்வியக்கம் இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறது. பைத்துஸ்ஸகாத் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு ஹஸரத் அவர்கள் முன்னின்று உழைத்தார் தனித்தனியே ஸகாத் கொடுப்பதனை தவிர்த்து ஜமாஅத்தாக இணைந்து ஸாகத் வழங்கும் முறைமையை சம்மாந்துறையில் ஏற்படுத்த ஹஸரத் அவர்களே காரணகர்த்தாவாக விளங்கினார் ஸகாத் நிறுவனமும் 1973ம் ஆண்டிலேயே ஸ்தாபிக்கப்பட்டது அகில இலங்கையிலேயே முதன்முதலாக ஹஸரத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டு ஸகாத் நிறுவனம் இன்று வரை பல ஊர்களுக்கு முன்மாதிரியாக காணப்படுகின்றது.

இன்று இலங்கையில் பல பாகங்களில் மட்டுமின்றி முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடமும் செல்வாக்குடன் திகழும் மஜ்லிஸ் அஷ்ஷுறா ஹஸரத் அவர்களின் நெறிப்படுத்தலிலேயே ஆரம்பமாயிற்று மஜ்லிஸ் அஷ்ஷுறா எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது இதனால் பொறுப்புக் கூறத்தக்க ஒரு நிர்வாக கட்டமைப்பு நம்பிக்கையாளர் சபையில் உருவாக்கப்பட்டது இந்த உருவாக்கத்திற்கும் அச்சாணியாக நின்று தொழிற்பட்டவர் ஹஸ்ரத் அவர்களே ஆவார். விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சம்மாந்துறையின் நிதியீட்டு முறைகள் வழிகேடான வட்டிப் பொருளாதாரத்துடன் தவிர்க்க முடியாமல் சிக்குண்டிரூந்தது இந்த பயங்கரமான சமுக பாவத்திற்கு நிவாரணம் தருவதுபோல ஹஸரத் அவர்கள் வட்டி இல்லாத இஸ்லாமிய நிதியீட்டு முறையை கடைப்பிடிக்கத்தக்கதாக இஸ்லாமிய வங்கி அமைப்பு ஒன்றை அல்மஷ்ரபுல் இஸ்லாமிய்யு எனும் பெயரில் உருவாக்கினார் இந்த வங்கி முறையினால் சேமிக்கவும் கடன் பெறவுமான வட்டி இல்லாத ஒரு நிதியீட்டு முறை இயங்கி வருகின்றது. ஹஸரத் அவர்களின் தலைமையில் மஜ்லிஸ் அஷ்ஷாறாவினால் 'பைத்துல் மால் நிதியமும் சமுகத்தேவைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டன "மேற்படி நிறுவனங்களின் வளர்ச்சியில் மெக்கிஸ்டோர் ஹாஜி புகாரி மௌலவி அப்துல்லா மாஸ்டர் றசீட் மாஸ்டர் றாஸீக் மாஸ்டர் இப்றாஹிம் மேசன் என்பவர்களின் பங்களிப்பும் அளப்பரியது.

1984ம் ஆண்டு முதல் இலங்கையின் இனப்பிரச்சினையானது கிழக்கில் புதிய வடிவமொன்றை பெற்றது பேரினவாதத்திற்கு எதிரான துப்பாக்கியின் இலக்குகள் முஸ்லிம்களை நோக்கி திருப்பபட்ட ஒரு துர்பாக்கியம் நிகழ்தது இதனால் அப்பாவி முஸ்லிம்களை பாதுகாக்வேண்டிய அதேவேளை நமது தரப்பிலிருந்து அத்துமீறல்கள் நிகழ்தது விடாமலும் பாதுகாக்க வேண்டிய ஒரு சமுக பொறுப்பு தனக்கு இருப்பதை ஹஸரத் அவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட்டார் இரா முழுவுதும் விழித்திருந்து பிராத்தனையில் ஈடுபடும் ஒரு செயலணிiயும் உருவாக்கினார் இந்த செயலணிக்கு தாமே தலைமை தாங்கி செயல்பட்டார் இந்த நடவடிக்கையினால் பல அற்புதங்கள் இந்த மண்ணிலே நடைபெற்றன.

1987 ஜுலை மாதம் 27ம் திகதி இலங்கை - இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்தானது அதன் பிரகாரம் பல்லாயிரக்கணக்கான இந்திய இராணுவதினர் தமது ஊரில் நிலை கொண்டனர் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த படை துரதிஸ்டவசமாக இலங்கை முஸ்லிங்களை காஷ்மீர் முஸ்லீம்களைப் போன்றும் பாகிஸ்தான் மக்களைப் போன்றும் தங்கள் எதிரிகள் என்ற மனப்படத்துடனேயே பார்க்கப் பழக்கப்பட்டிருந்தனர் கிழக்கின முஸ்லிம் அரசியலில் தலைமைகளும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத கட்டுப்பாட்டுகளும் அங்கு காணப்பட்டண ஹஸரத் அவர்கள் உருது மொழி மூலமான ஹிந்தி மொழி அறிவின் துணை கொண்டு இந்திய அமைதி காக்கும் படைத் தலைமைகளை சந்தித்து முஸ்லிம் தரப்பு நியாயங்களை எடுத்து கூறியதோடு மட்டுமல்லாது தமிழ் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பான தமது கவலையையும் வெளிப்படுத்தினார் இதனால் கவரப்பட்ட இந்திய பாதுகாப்புத் தலைமைகள் ஹஸ்ரத் அவர்களின் ஆலோசனையை மதிக்கத் தலைப்பட்டனர் இதனால் இந்திய பாதுகாப்புத் தொடர்பான தமது கவலையையும் வெளிப்படுத்தினர் இதனால் கவரப்பட்ட இந்திய பாதுகாப்புத் தலைமைகள் ஹஸ்ரத் அவர்களின் ஆலோசனையை மதிக்கத் தலைப்பட்டனர் இதனால் இந்திய படை வாபஸ் பெற்றுச் செல்லும் பொழுது கண்ணீருடன் விடை பெற்றுச் சென்றனர்.

மாவில் ஆறு மூடப்பட்டும் மூதூர் முஸ்லீம்கள் உண்ண உணவின்றி முடக்கப்பட்டு கட்டுப்பாடற்ற ஆயுத தாரிகளால் சூழப்பட்ட போது அவர்களுக்கான உலர் உணவைச் சேகரித்து எவ்வித பாதுகாப்புமின்றி தானே தலைமை தாங்கி அதனை எடுத்துச் சென்ற துணிச்சல் ஆச்சரியமானது. தன்னுடைய ஆரம்ப காலம் தப்லீகு ஜாமாத்தின் பிணைப்புண்டிருந்த இவர் ஒரு சர்வதேச பிரமுகருக்கான அந்தஸ்தை பெற்றிருந்தார் கடந்த 2017-08-19 ம் திகதியன்று ஹஸரத் அவர்கள் காலமாகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜியூன் அன்னாரின் சன்மார்க்கப் பணிக்கும் சமூகப் பணிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக